(க.கிஷாந்தன்)
27.02.2018 அன்று இரவு 8 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அட்டன் சமனலகம பகுதியில் 7 வீடுகளின் கூரைத்தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில காலமாக மலையகத்தில் ஏற்பட்ட கடும் வரட்சி காலநிலையின் பின்னர் இரண்டு தினங்களாக அட்டன் தலவாக்கலை, மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றினாலே இவ்வாறு கூரைத்தகடுகள் அள்ளுண்டுள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்களின் கூரைப்பகுதிகள் புனரமைக்கப்பட்டு அதே குடியிருப்பில் வாழ்ந்து வருவதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment