
Mohamed Sarook Abdul Azees
இன்று நான் கண்ட சாய்ந்தமருது அங்கே எரிபொருள் நிரப்பும் நிலையமும் ஒரு இறச்சி கடையும் மாத்திரமே திறந்து இருந்தது சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு முன்னால் விஷேட அதிரடிப்படையினர் காவலுக்கு நிற்கின்றனர்.
அங்கே பள்ளிவாசலுக்கு சற்று தொலைவில் பிரதான வீதியின் இரு மருங்கிலும் இளைஞர்களும் ஊரவர்களும் கூடி பேசிக் கொண்டு இருக்கின்றனர் அப்படியே சாஹிறா பாடசாலை வீதியால் கடற்கரை நோக்கி போனால் அந்த மகாநாடு நடக்கும் இடம் சாய்ந்தமருது எல்லைக்குள் தான் இருக்கின்றது அங்கே வெளியால் வைக்கப்பட்டுள் பதாதைகளில் அரை அமைச்சரின் படங்கள் இல்லை உள்ளே அதாவது மகாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளில் நாளைய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு வெளியிட்ட 1000 ருபாய் நாணயத்தாளை பதாதைகளில் அச்சிட்டு அதற்கு மேலே மர்ஹும் அஸ்ரப் அவர்களினதும் ஜக்கிய தேசியக் கட்சி கலகொதர அமைப்பாளர் அவர்களினதும் படங்களும் கிழே கல்முனை அரை அமைச்சரின் படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கூடி நிற்கின்றார்கள் கடற்கரை வீதியில் சாய்ந்தமருது தோனாவிற்கு முன்னால் அதாவது சீபிறிஸ் ஹோட்டலுக்கு கொஞ்சம் அருகாமையில் விஷேட அதிரடிப்படை பாதுகாப்புக்கு நிற்கின்றது சாய்ந்தமருது பக்கம் இருந்து வரும் வாகனங்கள் அதிரடிப்படை வீரர்களால் சோதனை செய்யப்படுகின்றது மொத்தத்தில் கடந்த கால கடும் பயங்கரவாத சூழ்நிலைகளில் கிழக்கில் நிலவிய நிலையை ஞாபகத்துக்கு கொண்டு வந்ததது.

Post a Comment
Post a Comment