அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி




அக்கரைப்பற்று அஸ்- ஸிறாஜ் கனிஷ்ட பாடசாலையின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் கோலாகலமாக பாடசாலையின் முதல்வர் அதிபர் எஸ். றினோஸ்டீன் அவர்களின் தலைமையில் அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் A.M. றஹ்மத்துல்லாஹ் அவர்களும் விஷேட அதிதிகளாக வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அக்கரைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலை மேம்பாட்டு உதவியாளர், சிறுவர் விளையாட்டுக்கு பொறுப்பான உத்தியோகத்தர், அக்கரைப்பற்று வலய அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் பாடசாலை புதிய, பழைய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும்
பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய இல்ல விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சங்களில் இதுவரைக்கும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காத றபான் அடித்தல், அரேபியா வாள் வீச்சு போன்ற எல்லோராலும் விரும்பி ரசிக்கப்பட்டதும், பாராட்டப்பட்டதுமான இ
ந்த நிகழ்வுகள் சிறப்பம்சங்களாக காணப்பட்டன. இதனை பயிற்றுவித்த பெருமை M.A.M.முசம்மில் அவர்களை சாரும்.
2018ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் சம்பியன் கேடயத்தை ஆசிரியர் M.L.M.நிசாம் அவர்களின் தலைமையில் வழிநடத்தப்பட்ட நீல நிற இல்லம் கைப்பற்றியது.