ஜனாதிபதி தான் பிரதமரை பாதுகாக்கின்றார்



தற்போதைய ஜனாதிபதி தான் பிரதமரை பாதுகாக்கின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் கேட்கிறோம். ரணில் தொடர்ந்தும் பிரதமராக இருப்பார் என நான் நினைக்கின்றேன். அது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கலாகும். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் அப்பதவிக்கு வருவார் என்றால் நாங்கள் வெளியே இருந்து எங்கள் ஆதரவை வழங்குவோம் என கூறினோம். 

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு ஆதரவு வழங்க மாட்டோம். அதற்கமைய நாங்கள் எதிர்க்கட்சியில் இருப்போம். எங்களுக்கு தகுதியான இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார்.