பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
முதலாவது இன்னிங்சிற்காக பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 9 விக்கட்டுக்களை இழந்து 713 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிற்காக விளையாடிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக இன்றை ஆட்டத்தில் மொமீனுல் ஹக் 105 ஓட்டங்களையும் மற்றும் லிடோன் டேஸ் 94 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுகளையும் தனன்ஜய டி சில்வா, தில்ருவன் பெரேரா, லக்ஷான் சதகேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் கிரிக்கட் போட்டி பங்களாதேஷின் சிட்டகொங் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment