#IsmailUvaizurRahaman
இன்று உலக வன விலங்குகள் தினம். இந்த வன விலங்குகள் தினமானது பூனை இனத்தைச் சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற 68 ஆவது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் அரிய வன விலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐ.நா அமைப்பு மார்ச் 03 ஆம் திகதியை உலக வன விலங்குகள் தினமாக அறிவித்தது. அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இந்த வன விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் வன விலங்குகள் தினமானது பூனை இன வன விலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment