பட்டல்கலையில், பாதை மாறிய பயணம்



(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பட்டல்கலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி வீழ்ந்ததில் 5 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

புளியாவத்தை பகுதியிலிருந்து டிக்கோயா பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி 25.03.2018 அன்று மாலை 3.30 மணியளவில் டிக்கோயா சாஞ்சிமலை பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 5 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவும், சாரதி மது போதையில் இருந்ததனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும்,முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.