தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், இலவச நடமாடும் சேவை, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 25.03.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.
தலவாக்கலை, லிந்துலை, கூமூட், பெயாவெல், நாகசேனை, ரட்ணகிறி, சமர்செட், ஒலிரூட், டெவோன் மற்றும் கொட்டகலை டிரைட்டன் ஆகிய பத்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நன்மையடையும் வகையில் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த நடமாடும் சேவையில் பிறப்பு சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்து கொடுத்தல், பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்திக் கொடுத்தல்,
பிறப்பு சான்றிதழின் புதிய பிரதியை வழங்குதல், விவாகமாகாத தம்பதியினரை சட்டவூர்வமாக விவாகம் செய்து வைத்தல், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு என பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நுவரெலியா மாவட்ட பிரதேச மற்றும் நகர சபைகள், பொலிஸ் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, மனித உரிமைகள் ஆணைக்குழு என பலரும் பங்கு பற்றியமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment