பிற்போடப்பட்டது





கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை தோமஸ் கல்லூரிகளுக்கு இடையில் நடக்கவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது. 

காலஞ்சென்ற தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் மார்ச் 8 ஆம் திகதி நடைபெற உள்ளதால் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அஷான் த சில்வா தெரிவித்துள்ளார். 

அதன்படி, 8 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.