மின்சார கம்பம் உடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில்



(க.கிஷாந்தன்)
அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டமக்கள் வாழும் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள மின்சார கம்பம் ஒன்று உடைந்து லயன் குடியிருப்பு காணப்படும் சம்பவம் தொடர்பில் லிந்துலை மின்சார நிலைய உத்தியோகத்தர்கள் அசமந்த போக்கில் செயல்படுவதாக உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த தோட்டத்தில் உள்ள லயன்குடியிருப்பிற்கு மேல் செல்லுகின்ற மின்கம்பிகளும் வயர்களும் லயன் கூறையின் தரைமட்டத்தில் தொங்கும் நிலையில் காணப்படுவதால் எந் நேரமும் எங்கள் உயிருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என இம் தோட்டமக்கள் அங்கலாகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலை மின்சார நிலையத்திற்கு பலமுறை அறிவித்த போதும் குறித்த மின்சார நிலையத்தின் உள்ள உத்தியோகத்தர்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லையென அம் மக்கள் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த லயன் குடியிருப்பில் மாத்திரம் சுமார் 40 குடும்பங்கள் வசிக்கும் இந்த லயன் குடியிருப்பில் வாழுகின்ற மக்களுக்கு மின்சார கம்பங்களையும், கம்பிகளையும் சீர் செய்து தருவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .