(அப்துல்சலாம் யாசீம் )
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஹபீபுல்லா பாபலுல் இன்று (29) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் டொமினிகன் குடியரசின் கௌரவ கொன்சல் ஆகவும் ஜக்கிய நாடுகள் சபையோடு இணைந்த நியூயோர்க் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு சிறந்த சேவையாளர் விருதுகளையும் பெற்றவர்.
இவர் நிந்தவூர் அல் அஷ்றக் மத்திய மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.
சமூக சேவையில் அக்கறை கொண்டுள்ள இவர் ஹோட்டல் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் நி
ந்தவூர் மர்ஹூம் மௌலவி சேகு இப்றாஹீம் மௌலானா முஹைதீன் பாவா ஆலீம் ,சித்தி சகிய்யா தம்பதிகளின் செல்வப்புதல்வரும் ஆவார்!

Post a Comment
Post a Comment