(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் வீடுகள் இல்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கு பதினைந்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் வீடமைப்பு அதிகார சபையின் திட்டங்கள் குறித்து கலந்துறையாடலொன்று இன்று (பதினைந்தாம் திகதி) வியாழக்கிழமை
திருகோணமலை கிறீன் விதியிலுள்ள வீடமைப்பு அதிகார சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
வீடுகள் இல்லாமல் பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் 2018ம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வீடுகளை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி அத்தொழிலை செய்வதற்குறிய உபகரணங்களையும் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் யூ.எல்.ஏ.அஸீஸ் , கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உறுப்பினரும்,ஆளுநரின் ஊடக செயலாளருமான ஹஸன் அலாவுதீன் மற்றும் பணிப்பாளர் சபையின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் ்

Post a Comment
Post a Comment