4 பிள்ளைகளின் தந்தை மண்வெட்டியால் அடித்துக்கொலை



(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் பகுதியில் 01.04.2018 அன்று இரவு 8 மணியளவில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டு மண்வெட்டியுடன் சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ரகு எனப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இறந்தவரின் சடலம் வைத்தியப்பரிசோதனைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.