டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட மீன்களுடன் 6 பேர் கைது



திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடற்பிரதேசத்தில் டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட 1843 கிலோ பாரமீன்களுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாரமீன்களை விற்பனைக்கு கொண்டு சென்ற 6 நபர்களை குச்சவெளி பெலிஸாரும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகளும் இணைந்து கைதுசெய்தனர். 

திரியாய் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

1,100,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மீன்களையும் அவற்றைக் கொண்டு சென்ற மூன்று வாகனங்களையும் ஆறு சந்தேகநபர்களையும் இதன்போது கைது செய்துள்ளனர்.