உயிர்த்தெழுந்ததன் மூலம் இயேசுபிரான் மரணத்தை வெற்றி கொண்டதனை குறித்து அனுஷ்டிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தினமானது உலகவாழ் கிறிஸ்தவ மக்களால் ஓர் புனித பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னரான தவக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்து, தியாகங்களையும் சமய வழிபாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.
மானிட வர்க்கத்திற்காக தமது உயிரை நீத்த இயேசு பிரான், மரணத்தின் போது அனுபவித்த வேதனைகளை நினைவுகூருவதன் மூலம் வேதனை கொள்வதையும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்ததன் மூலம் அந்த பக்தர்களின் மனதில் ஏற்படும் மன மகிழ்ச்சியையும் ஈஸ்டர் பண்டிகை வெளிப்படுத்துகின்றது.
அதன் மூலம் மரணத்தில் காணப்படுகின்ற இம்சையையும், குரோதத்தன்மையையும் கடந்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வாழ்க்கையினைப் பற்றிக் கொள்வதன் அபூர்வமான மகிழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகை வெளிப்படுத்துகின்றது. அத்தோடு தெய்வீகத் தியாகத்தைப் பற்றிய ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் ஈஸ்டர் திருநாள் வெளிப்படுத்துகின்றது.
எல்லா உயிரினங்களும் இம்சித்தல் மற்றும் தாக்கங்களுக்கு உட்படுத்துதலை வெறுக்கின்றன. சகலவித தோற்றங்களும் உயிர்ப்பினில் இருந்தே பிறக்கின்றன. ஒவ்வொருவருக்கும் எதிராக ஏந்தப்படும் சகலவித ஆயுதங்களும் தீமையின் கட்டளையினாலேயே எழுகின்றன. அதனால் அவற்றுள் குரோதத்தினதும் வைராக்கியத்தினதும் தீச்சுவாலையே தேங்கியிருக்கின்றன.
இந்த உலமானது பாசமும், அந்நியோன்ய பிணைப்பும் கௌரவமும், நல்லிணக்கத்தை நேசிக்கும் மனிதர்களினாலேயே அழகு பெறுகின்றது. அத்தகையதோர் சுவர்க்கத்தினை நோக்கிய பாதையை உயிர்த்த ஞாயிறு தினமே திறந்து வைக்கின்றது. அவ்வழியில் பயணிப்பதன் மூலம் புதியதோர் உலகைக் காணுவதற்கும் மானிடத்துவத்தைப் பற்றி மீள சிந்தித்துப் பார்ப்பதற்கும் இந்த ஈஸ்டரின் போது நாம் அனைவரும் உறுதி கொள்வோமாக!
சகல கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள, சமாதானமான ஈஸ்டர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


Post a Comment
Post a Comment