விவசாயப் பாதை சேதமடைந்து வருவதைக் கண்டித்து, பாலமுனையில்



விவசாயப் பாதை சேதமடைந்து வருவதைக் கண்டித்து பாலமுனை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்.....
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அரசயடி விவசாய வீதியினூடான கனரக வாகனங்களின் போக்கு வரத்தினால் வீதிகள் பாாியளவில் சேதமடைந்து வருவதாகக் கண்டித்து நேற்று (07.04.2018) அப்பிரதேச விவசாயிகள் வீதியை மறித்து ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
பாலமுனை பிரதான வீதியிலிருந்து செல்லும் அரசயடி விவசாய பாதையானது. 50 வருடங்கள் பழமைவாய்ந்ததாகக் காணப்படுவதுடன் ஹிறாநகா், அஸ்ரப் நகா் மற்றும் தீகவாபி ஆகிய கிராமங்களுக்கும் நாளாந்தம் அதிகளவில் பயணிகள் போக்கு வரத்தில் ஈடுபட்டு வரும் முக்கியத்துவமிக்கதொரு பாதையாகவும் இது உள்ளது.