அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடுப் பிரதேசத்தில் துப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எம். அறூஸ் உத்தரவிட்டார்.
நெய்னாகாடு பாலத்துக்கு அருகில் திங்கட்கிழமை (09) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, துப்பாக்கியின் உரிதிப்பாகங்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தப்பியோடிவிட்டாரெனவும் மோட்டார் சைக்கிளுடன் நின்ற மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (10) மாலை ஆஜர் செய்த போது, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


Post a Comment
Post a Comment