அக்கரைப்பற்று M.I.ஜூனைதீன் முன்னாள் அதிபர் காலமானார்.



#இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்.

அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர்  M.I.ஜூனைதீன் களுபோவில வைத்தியசாலையில் தனது 85 வது வயதில் காலமானார்.

இவர் இலங்கையின் ,பல்வேறு இடங்களில், ஆசிரியராகப் பணி புரிந்து, பின்னாட்களில்
அதிபராக,அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மற்றும் ஆயிஷா பாலிகா மகா, கல்முனை ஸாஹிராக் கல்லுாரி,ஏறாவுர் அலிகார் வித்தியாலயம் போன்றவற்றில் மகத்தான பணி புரிந்து, அதிபர்  சேவையிலிருந்து ,ஓய்வு பெற்றார். 

மாலைதீவு நாட்டில் ஆங்கிலம் போதிக்கவென ஆரம்ப நாட்களில் இலங்கையிலிருந்து சென்ற  அரிதான ஆசியருள் ஒருவாக, ஒரு தசாப்பத காலம் வரைப் பணிபுரிந்தவர். 

மாளிகைக்காட்டைச் சேர்ந்த மர்ஹீம் ஜெசீமா ஆசிரியை கரம் பற்றிய இவர், கொழும்பில் வாழ்ந்தும் வந்தார். இவர் நத்வினா,சியானா, சட்டத்தரணி சபானா ஆகியோரின் தந்தையும்,கல்விமான் மர்ஹீம் SHM. ஜெமீல் அவர்களது மச்சானும் ஆவார்.

நல்லடக்கம் இன்று கொழும்பில் இடம்பெற்றது.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.!