#சட்டத்தரணிஉவைசுர்ரஹ்மான்.
கோலாலம்பூர்:
அன்வர் இப்ராகிம் (பிறப்பு 1947 ஆகஸ்ட் 10) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அன்வர் என்று அழைக்கப்படும் இவர் மலேசியத் தமிழர் மத்தியில் மிகப் பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார். இவர் மலேசிய முன்னாள் துணைப் பிரதமராகவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 1993 இல் இருந்து 1998 வரை மலேசிய துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
எனினும் 1998ல் அவரைப் பிரதமர் மகாதீர் பின் முகமது பதவியில் இருந்து நீக்கி, ஊழல் மற்றும் ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைத்தார். இவரைச் சிறையில் அடைத்த போது கோலாலம்பூரில் 1998ல் கலவரம் வெடித்தது. பின் 2008 ல் விடுதலை ஆனார்.
2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்றிருந்தாலும் தற்போது அவரது 2014 குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்ட பின்னர் ஐந்து ஆண்டு சிறை தண்டனையிள் உள்ளார்.[
ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மகாதிர் முகமது கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக சனியன்று மகாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகமதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மகாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மன்னர்
அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் மே 15 ஆம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்ததகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம் சிறை மீண்ட செம்மலானார் அன்வர் இப்றாகிம்.


Post a Comment
Post a Comment