புகையிரத பெட்டிகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடு



வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. 

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் புகையிரத திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.