எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில்



(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், ராகதீஸ்வர கலை நிகழ்வும் பாடசாலையின் அதிபர் தலைமையில் 04.05.2018 அன்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் கலந்து கொண்டார்.

இப்பாடசாலையில் இடபற்றாக்குறை காரணமாக இது தொடர்பாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைப்பதினையும், அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் அவர்கள் உட்பட வலய கல்வி பணிப்பளார், அதிபர், ஆசிரியர்கள் இருப்பதனையும், இடம்பெற்ற நிகழ்வுகளையும், அதிதிகள் முன்வரிசையில் அமர்ந்திருப்பதையும், கலை நிகழ்வுகளையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.