சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பு



மும்பையின் பவை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜே-டே வின் கொலை வழக்கில் இன்று (02.05.18) மும்பை மோக்கா சிறப்பு நீதிமன்றம் (Maharashtra Control of Organized Crime Act-MCOCA) தீர்ப்பளித்ததுள்ளது.
இந்த, வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளியான மும்பையின் முன்னாள் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிழலுலக மன்னனான சோட்டா ராஜனுடன் சேர்த்து 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு, அவர் இந்தோனீஷியாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டார். இது மட்டுமின்றி மேலும் 17 பேரை கொன்ற வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பை செய்தியாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மும்பையின் முக்கிய குற்றப் புலனாய்வு நிருபராக கருதப்பட்ட ஜோதிர்மயி டே, ஜே-டே என்ற பெயரில் தனது செய்தி அறிக்கைகளை வழங்கி வந்தார். 2011ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி மதியம் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் இதுவரை 155பேர் வாக்குமூலம் அளித்த போதிலும், இந்த கொலையை நேரில் பார்த்ததாக யாருமே சாட்சி சொல்லவில்லை.