(க.கிஷாந்தன்)
கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 16.05.2018 அன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து அட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ஓட்டுனரும், பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அணைவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இந்த முச்சக்கரவண்டியை பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.


Post a Comment
Post a Comment