அக்கரைப்பற்று தாய், மகப்பேற்றின் பின்பு சிகிச்சை பலனின்றி காலமானார்



(இர்சாத்)

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியைச் சேர்ந்த சக்கரியா பாத்திமா சீனா என்பர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில். மகப்  பேற்றுக் கென அனுமதிக்ப்பட்டு கடந்த வாரம் குழந்தையும் பிறந்திருந்தது. இருப்பினும் குறித்த குழந்தையின் தாய், தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்கையும் பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் இன்று , அக்கரைப்பற்று  பதில் நீதிபதி சட்டத்தரணி உவைசுர் ரஹ்மானு்க்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

தற்சமயம், கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள, இந்த மரணித்த தாய் சம்மந்தமான மரண விசாரணை அறிக்கையைப் பெற்றுத் தருமாறு  கல்முனை  கௌரவ  நீதிபதிக்கு, அக்கரைப்பற்று  பதில் நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.