இலங்கைக் இலக்குகு 277 ஓட்டங்கள்



மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

நாணயசுழற்சியை ​வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கட்டுக்கு 414 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. 

இதில் டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 4 விக்கட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கட்டையிம் வீழ்த்தினர். 

இதையடுத்து போட்டியை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களளளுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கட்டுக்களையும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து, விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 72 ஓவரில் 7 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்த போட்டியில் இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். 

இலங்கை அணி வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் போட்டியை தொடங்கிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் ஆடடமிழக்காமல் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

எனவே போட்டியின் இறுதி நாளான இன்று இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 277 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.