சர்வதேச யோகா தினத்தையொட்டி, 4ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்வு, புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில், ஆரையம்பதி பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று (21) நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி.ஜே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது, ஆரையம்பதி இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் மாணவர்களால் யோகாப் பயிற்சி இடம்பெற்றது.


Post a Comment
Post a Comment