தென் அதிவேக நெடுஞ்சாலையில், 65 ஆவது மைற்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் பலியாகியுள்ளனரென, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த வான், அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலன்தாங்கிய லொறியுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த லொறியின் டயர்களில் ஒன்று சேதமடைந்ததையடுத்து, அதனை திருத்துவதற்காக, அந்த லொறி, நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அறியமுடிகின்றது.


Post a Comment
Post a Comment