டெங்கு சோதனை நடவடிக்கைகள் தீவிரம்



ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 8 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில், 6 வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், நுளம்பு உற்பத்தியாகும் வகையில் இருப்பிடங்களை வைத்திருந்த 4பேருக்கு எதிராக எச்சரிக்கைக் கடிதமும் வழங்கப்பட்டது.
குறிப்பாக வாழை மரத்தை வெட்டியதன் பிற்பாடு வாழை அடியில் ஏற்படும் பள்ளத்தினுள் தேங்கி நிற்கும் நீரினுள்ளும் அதேபோன்று, வாழை மொத்தியில் இருந்து கீழே விழும் இதழ்களுக்குள்ளும் டெங்கு நுளம்புகள் உருவாகும் சாத்தியத்தை பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார அதிகாரிகள், மக்களுக்கு சுட்டிக்காட்டினர்.
மேலும், டெங்கு உருவாகும் வகையில் இடங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
அத்தோடு, பாடசாலை வளாகம் ஒன்றையும் அதிகமான கிணறுகளையும் பார்வையிட்டனர்.