தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீள அவர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோருவது இனவாதமா? என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் இனவாத கருத்துக்களை கூறிவருவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து, வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே, இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்துக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளவதற்காக அழுத்தம் கொடுக்க முடியாதவர்களாக இருந்தனர். வடக்கு மக்களின் உரிமைகளுக்காக போராடும் பல சந்தர்ப்பங்களில் தெற்கில் இவ்வாறான விமர்சன கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கான உரிமைகளைக் கோருவதானது சிங்களவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் அல்ல. எனினும் அதனை சிங்களவர்களுக்கு எதிரானதாக சிலர் கருதுகின்றனர். தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு இனவாதம் எனக் கூறுவது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment