அக்கரைப்பற்றில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு



-ரீ.கே.றஹ்மத்துல்லா
சா்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி, "புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியொன்று அக்கரைப்பற்றில் இன்று (01) இடம்பெற்றது.
ஜும்மா தொழுகையை தொடர்ந்து, குறித்த விழிப்புணர்வுப் பேரணியானது, பட்டினப்பள்ளிவாயல் முன்னால் ஆரம்பமாகி, மாநகர சபை வரை சென்று மாநகர மேயா் அதாஉல்லா அகமட் ஸக்கியடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள், பீடி சிகரெட் உட்பட அனைத்து வகையான போதைப்பொருட்களையும் முற்றாக தடை செய்யவேண்டும் என, குறித்த மகஜரில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது