அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பீற்றர்போல் உத்தரவு, ஆலையடிவேம்பு தவிசாளரைக் கைது செய்ய



அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது நேற்றுக் காலை, ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மோட்டார் பைசிக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.


இதில் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனையோர், கல்முனை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இன்றைய தினம் அக்கரைப்பற்று பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புற்றதாகத் தெரிவிக்கப்படும் இரண்டு பெண்களை ஆஜர்படுத்தி இவர்களை விசாரணை முடிவடையும் வரை, விளக்கமறிறயலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 


பாதிக்கப்பட்ட நபர்கள், மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளால், முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை கவனத்திலெடுத்த நீதிபதி, இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார்.



அக்கரைப்பற்று பொலிசாரின் மேலதிக விசாரணைகளில், அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு பிரதேச  சபையின் தவிசாளரின் துாண்தலின் பேரில் குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் பலர் குழுமியதாகவும், அவர்களில் சிலர் தாக்குதலைத் தொடுத்ததாகவும் மன்றுரை செய்ததுடன், குறித்த தாக்குதலுக்கான பிரதான சந்தேக நபரான அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தலைவரையும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக, நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர்.



இதனை அடுத்து, ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தலைவரையும் தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு,அக்கரைப்பற்று கௌரவ  மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.