சவுதி அரேபிய சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை



மகாவலி ஆற்றில் படகு சவரி செய்த 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த 7 பேரில் 6 நபர்கள் காப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்த படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மகாவலி ஆற்றின் கட்டுகஸ்தொட்ட, குஹாகொட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.