(க.கிஷாந்தன்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளது.
09.06.2018 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்


Post a Comment
Post a Comment