இன்சாப் நீங்கள் மரணிக்கவில்லை உங்களைக் கொலை செய்துவிட்டார்கள்...அலட்சிய அறிவிலிச் சாரதியின் வாகனக் கதவுத் திறப்பின் மூலமும்....
முற்சக்கரச் சாரதியின் கட்டுப்பாடற்ற அதிவேக வாகனச் செலுத்தல் மூலமும்....
பாடசாலை நேர சூசியின் மூலமும்....
வாகனத் தரிப்பிடத்துக்கு இடமொதுக்காத கோமகன்கள் மூலமும்....
வாகன அதிவேகத்தைக் கட்டுப்படுத்தாத போக்குவரத்துப் பொலீசார் மூலமும்....
போக்குவரத்துப் பொலீசாருக்கு இடையூறு விதிக்கும் அரசியல்வாதிகள் மூலமும்....
நீங்கள் கொலை செய்யப்பட்டுவிட்டீர்கள்....
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
வலது பக்கம் அமைதியாகச் செல்லும் நாலு சக்கர வாகனத்துக்குப் பின்னால் வந்து தலை ஒளியை ஒளித்துக்காட்டி தன் தாய் மரணித்த தூது கொண்டு செல்லுபவன் போல் கிறுக்குத்தனமாக முந்திச் செல்ல வழி கேட்கும் மோட்டார் சைக்கிள் ஓடும் முட்டாள்கள் வாழும் ஊரில் நல்லது சொல்லுபவர்கள் என்றும் கோமாளிகளாகவே கருதப்படுகின்றனர்....
இன்னும் எத்தனை இன்சாப்கள் அலட்சியங்களுக்கு இரையாகப் போகின்றனரோ....
உங்கள் உயிரற்ற உடலைக் காண உங்கள் உற்ற நண்பன் மகாசித் உங்களைக் காண கண்ணீரோடு வருகிறான்....
இன்றும் என்றும் நீங்கள் காத்தான்குடி சமூகத்தின் அன்பு மகன்....
விபத்துக்கு இரண்டு நாளைக்கு முதல் உங்களோடு விளையாடிய Cig நண்பர்கள் வருவார்கள் உங்களைக்காண....
அவர்களின் சோகத்தை எப்படித்தான் ஈடுசெய்யப் போகிறோமோ....
காத்தமா நகர் உங்களைக் காக்கவில்லையே என்ற கவலையோடு அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்றவனாக.....
-ஜுனைட் முஜீப்-


Post a Comment
Post a Comment