‘400 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை’



10 வருடங்களுக்கு மேலாக தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய, 7199 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 400 இற்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லையென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆசிரிய சேவைக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து தேசிய கணக்காய்வாளர் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்யவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் ஆதரவுடன், குறித்த ஆசிரியர்கள் பாடசாலைகளில் சுமார் 15 வருடத்துக்கு அதிகமான காலம் கடமையாற்றுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.