
#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி இன்று காவேரி மருத்துவ மனையில் காலமானார். கலைச்சூரியன் மறைந்தது. எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி இன்று காவேரி மருத்துவ மனையில் காலமானார். கலைச்சூரியன் மறைந்தது. எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!.

முத்துவேல் கருணாநிதி -M. Karunanidhi,
இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
பிறப்பு:ஐீன் 3, 1924
திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவர்.
முன்னாள் தமிழக முதல்வர்.
1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 94 வயது பிறந்தநாளை கொண்டாடினார்.
2018/8/07 இன்று செவ்வாய்கிழமை காவேரி மருத்துவ மனையில் காலமானார்.
கலைஞர் #கருணாநிதி
* 50 ஆண்டு கட்சி தலைவர் * 5 முறை முதல்வர் * 60 வருடம் சட்டமன்ற உறுப்பினர் * 80 வருட அரசியல்வாதி
இதோ அவரது திரைப் பயணம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்:
கருணாநிதியின் எழுத்தில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்' ஆகும். இது கடந்த 1944ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் நடத்தப்பட்டது.
சிவாஜி, எம்.ஜி.ஆர். என அப்போதைய முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர் கருணாநிதி. உதாரணத்திற்கு சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .
முதன்முதலில் எம்.ஜி.ஆர். முன்னணி வேடத்தில் நடித்த படமான ராஜகுமாரி தான், கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் ஆகும். இது கடந்த 1947ம் ஆண்டு ரிலீசானது. தனது திரைப்பயணத்தை ராஜகுமாரி மூலம் 1947ல் தொடங்கிய கருணாநிதி, 2011ம் ஆண்டு பொன்னர்- சங்கர் படம் வரை 64 வருடங்கள் தொடர்ந்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி. 21 நாடகங்களை எழுதிய கருணாநிதி, 69 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இவற்றில் கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் 'பராசக்தி . கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், 'ஸ்ரீ ராமானுஜர்' - மதத்தில் புரட்சி செய்த மகான். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு அவர் வசனம் எழுதத் தொடங்கியபோது அவரது வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா.#கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை அவர் வழங்கினார். இதேபோல், எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.
விருதுகளும்,பெற்றசிறப்புகளும்
- உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
- கருணாநிதி 1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
- 1987 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
- 2010 ஆம் ஆண்டு, ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார்.
“தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்” என்ற அவரது வசனம் கால வெள்ளத்தால் அள்ளிச் செல்ல முடியாதது.




Post a Comment
Post a Comment