அறுபத்து நான்காவது அகவையில், ஆளுனர்



(அப்துல்சலாம் யாசீம்)


கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகால்லாகமவின் 64வது பிறந்த தினத்தை முன்னிட்டு  சேருவில ரஜ மஹா விகாரையில் கடந்ம (6)ஆம் விஷேட வழிபாடு இடம் பெற்றது.

சேறுவில பிரதேச சபையினரும்  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வழிபாட்டில்  பொலிஸார் உட்பட கிராமமக்களும் கலந்து கொண்டனர்.

சில அரசியல்வாதிகள் தங்களது பிறந்த நாளை ஆடம்பரமான முறையில் கழித்து வரும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் சமய வழிபாட்டுடன் கொண்டாடுவது நாட்டுக்கு ஒரு முன்மாதிரி எனவும் சேறுவில விகாராதிபதி தெரிவித்தார்.

அத்துடன்  சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு சென்று அன்னதானம் வழங்குவதில் ஈடுபட்டதுடன்   பிரதேச மக்கள் தங்களது சேவை தொடர வேண்டுமெனவும்  நீடுழி காலம் வாழ்வதற்கு கடவுள் துணை புரிய வேண்டும் எனவும் ஆசிர்வதித்தனர்.