(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் 17.08.2018 அன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு காரணமாக அட்டன் கொழும்பு, அட்டன் கண்டி ஆகிய பிரதான வீதிகளினுடான தடைபட்ட போக்குவரத்து அட்டன் பொலிஸாரால் மற்றும் வீதி போக்குவரத்து அதிகார சபையினர் ஆகியோர் இணைந்து வீதியில் கொட்டி கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து அட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஊடான போக்குவரத்து சுமார் 12.00 மணியளவில் வழமைக்கு திரும்பின.
திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியின் இரு பக்கங்களிலும் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை பெய்து வருவதனால் மலையக வீதிகளில் பயணஞ் செய்யும் சாரதிகள் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மிகவும் கவனமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு அட்டன் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment