சிற்றுண்டி விற்பனை வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை



அம்பாறை, காரைதீவு பிரதேசத்திற்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் சிற்றூண்டி விற்கும் வாகனங்களில்  ஒலி எழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் இன்று  (05) தெரிவித்தார்.
குறித்த வாகனங்கள் கூடிய சத்தத்துடன் சினிமாப் பாடல்களை இசைத்த வண்ணம் திரிவதால் சிறுவர்கள்,நோயாளர்கள் மற்றும் க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அ​சௌகரியத்துக்கு முகங்கொடுப்பதாகவும், இவர்களின்  நன்மை கருதியே ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதென கூறினார்.
இந்த ஒலி பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளதென பெற்றோர்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.