நொபெல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அன்னான் காலமானார்



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர்
கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.










"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.


மனிதாபிமான பணிகள் தொடர்பாக கோஃபி அன்னான் நோபல் பரிசை பெற்றுள்ளார். 1997 முதல் 2006 வரை, இரண்டு முறைகள் அவர் ஐ.நா. பொது செயலர் பதவியில் இருந்துள்ளார்.

உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை பெற்ற கோஃபி அன்னான், ஆப்ரிக்காவில் கானா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

தனது ஐ.நா. செயலாளர் பதவிக்காலத்துக்குபின், சிரியாவில் ஐ.நா. அமைப்பின் சார்பாக சிறப்பு தூதராக அவர் செயல்பட்டார். அந்த பிராந்தியத்தில் நடந்த மோதலுக்கு சுமூக மற்றும் அமைதி தீர்வு ஏற்பட தேவையான முயற்சிகளுக்கு அன்னான் தலைமையேற்றார்.

தீவிர எச்.ஐ. வி/எய்ட்ஸ் தொற்று பரவல் மற்றும் இராக் போர் நடந்த காலகட்டத்தில் கோஃபி அன்னான் ஐ.நா. செயலரராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  #KofiAnnan #RIPKofiAnnan