(#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة) இஸ்லாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும்.
அரபா தினத்தின் சிறப்புகள்
அரபா தினம் ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் ஆகும்.
அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.
அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.
ஹஜ் செல்ல வசதி இல்லாதோர் அரபா தினத்தில் அவரவர் இடத்திலேயே நோன்பு வைப்பர்.
சுமார் இருபது இலட்சத்திற்கு மேற்பட்டோர்,2018ல், இன்று சவுதி அரேபியாவில் உள்ள, புனித மக்காவில்,அரபா தினத்தில் ஒன்று கூடி இறைவனுக்காக தம்மை அர்ப்பணித்து,பாவமன்னிப்பில் ஈடுபடுகின்றனர்.#Arafah




Post a Comment
Post a Comment