மாடியில் இருந்து விழுந்ததில் சீன பெண் பலி



நுவரெலிய, மாகஸ்தொட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சீனா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.