நகராட்சி மன்ற அனுமதி பெறாத கட்டப்பட்ட கட்டிடத்தின் அகற்றுக



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தினை உடனடியாக உடைத்து அகற்றுமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (19ஆம் திகதி) கட்டளை பிறப்பித்துள்ளது

 திருகோணமலை வித்தியாலய வீதி இலக்கம் ஐந்தில் வசித்துவந்த  எஸ்.ராஐநாதன் என்பவருக்கு  இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகராட்சி மன்றத்தில் அனுமதி பெறாமல் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றையதினம்  பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே   நீதவான் இக்கட்டளையை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றுமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கட்டளையிட்டதுடன் அக்கட்டிடத்தினை  உடைப்பதற்கு  தேவையான  செலவுகளை பிரதிவாதியான எஸ்.ராஐநாதனிடம் அற விடுமாறும்  கட்டளையிட்டார் .

நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் கீழ் 44 ஆம் இலக்க  28 ஏ  எனும்  சட்டத்தின் பிரகாரம் மனுதாரரின் மனுவை விவரிக்கப்பட்ட குறித்த அனுமதி இல்லாத பட்சத்தில் அல்லது பகுதியை உடைத்து அகற்றுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் வழங்கி கட்டளை பிறப்பித்தார்.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் சட்டவிரோதமான முறையில்  அதிகளவிலான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அரசியல்வாதிகளின் உதவியுடனேயே இவ்வாறான கட்டடங்கள் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாகவும் நகராட்சி மன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.