தெமட்டகொட ரயில்நிலைய தரிப்பிடத்தில் இருந்த ரயிலில், திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இரண்டு ரயில் பெட்டிகள், முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட மூன்று தீயணைக்கும் வாகனங்கள், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அவை திடீரென தீப்பித்துள்ளன என்று தெரிவித்த பொலிஸார், இந்தத் தீ விபத்து காரணமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment