அளவிற்கு அதிகமாக மதுபான போத்தல்களுடன் ஒருவர்,கைது



(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் 24.09.2018 அன்று மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் போய தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபரிடமிருந்து 16 முழு போத்தல்களும் ஒரு அரை போத்தல் மதுபானமும், மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்கள் 25.09.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.