பொத்துவில் பிரதான வீதியில் விபத்து



அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

விபத்தில் 34 வயதுடைய தாயும் அவருடைய 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 11 வயதுடைய மகன் மற்றும் 12 வயதுடைய மகள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.