AB.Yasseem,
திருகோணமலை வளாக விரிவுரையாளர் நடராசா போதநாயகி (29 வயது) நேற்றைய தினம் திருகோணமலை சங்கமித்த கடற்கரைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை தலைமையக பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்கவிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தயைடுத்து மேலதிக நீதவான் பிரேத பரிசோதனை முன்னெடுத்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் விடுமுறை சென்று உள்ளமையினால் பிரேத பரிசோதனைக்காக வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதனை முன்னெடுக்குமாறும் திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமார ரத்நாயக்க பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதனை அடுத்து இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணரின் ஆனால் மேற்கொள்ளப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளர் மூன்று மாத கர்பிணி எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மேலதிகமாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதினால் அவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment