அக்கரைப்பற்றில் நடை பவணி



இன்று (2018.09.22) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் அக்கரைப்பற்று பிள்ளையார் கோயிலில் இருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று அங்கு அனைத்து மத சகோதர்களும் கைகோர்த்து சமாதானம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தி அம்பாறை வீதியுடாக நடைபவணி ஆரம்பமாகி ஜும்மா பெரிய பள்ளிவாசலில் முடிவடைந்தது...
அங்கு அனைத்து இன மதத் தலைவர்களும் தங்களுடைய மதத்தில் ஒற்றுமை மற்றும் சமாதானம் தொடர்பாக கூறப்பட்டுள்ளவற்றை நடைபவணியில் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவான முறையில் சொற்பொழிவு நடத்தினர்.
இந்த நிகழ்வை அட்டாளைச்சேனை சர்வ மத குழு ஏற்பாடு செய்திருந்ததோடு இதில் அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் கலந்து கொண்டனர்.