( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருற்களை தம்வசம் வைத்திருந்த இரண்டு நபர்களுக்கும் இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு இன்று (17 ஆம் திகதி) திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச். எம் ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
30 மில்லி கிராம் ஹெரோயினை தாங்கள் வைத்திருந்ததாக நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபர்களுக்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம்.ஹம்ஸா புத்தி கூறி தண்டனை விதித்த சம்பவம் இன்று திருகோணமலை நீதிமன்ற திறந்த நீதிமன்றத்தில் இடம் பெற்றுள்ளது,
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன்பிடி கிராமத்தில் வசித்து வரும் ஏ.எம்.எப்.பிமேரத்ன (50 வயது) மற்றும் திருகோணமலை தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த டி எப். எஸ். வீ. என். என். காமினி
(53 வயது) ஆகிய இருவருக்குமே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட வந்த சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதவான் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறினால் இரண்டு மாதம் சிறை வழங்குமாறும், அதேவளைஇரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.


Post a Comment
Post a Comment