அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை



அரச சேவையின் சம்பள முரண்பாட்டை சரி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த அறிக்கையை ஒப்படைப்பதாக ஆணகை்குழுவின் தலைவர் எஸ். ரனுன்கே கூறினார். 

அரச சேவையில் காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

15 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆணைக்கழுவின் தலைவராக எஸ். ரனுன்கே நியமிக்கப்பட்டார். 

புகையிரத, தபால், சுகாதாரம் போன்ற அரச துறைகளின் சம்பள கட்டமைப்பில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தீர்ப்பதற்காக பரிந்துரைகள் முன்வைப்பது அந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.